×

இந்தோனேஷியா பேட்மின்டன்: வாங், யங் அபாரம்; இறுதி சுற்றுக்கு தகுதி

ஜகார்தா: இந்தோனேஷியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகளில் சீன வீராங்கனை வாங் ஸியி, தென் கொரியா வீராங்கனை ஆன் ஸே யங் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இந்தோனேஷியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகள் வாங் ஸியி, ஹான் யு மோதினர்.

இப்போட்டியில் துவக்கம் முதல் துடிப்புடன் செயல்பட்ட வாங் ஸியி, 21-12, 21-13 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஆன் ஸே யங், ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி மோதினர். இப்போட்டியின் முதல் செட் கடுமையாக இருந்தபோதிலும், அதை 21-18 என்ற செட் கணக்கில் யங் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் இருவரும் சளைக்காமல் மோதினர். இருப்பினும், அதையும், 21-17 என்ற புள்ளிக்கணக்கில் யங் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்ற அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

The post இந்தோனேஷியா பேட்மின்டன்: வாங், யங் அபாரம்; இறுதி சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Wang ,Jakarta ,China ,Wang Ziyi ,South Korea ,Ahn Se-young ,Indonesia Open badminton ,Indonesia Open ,Jakarta, Indonesia… ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...