×

பெங்களூரு ஆர்.சி.பி.வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் பெண் பலி

திருப்பூர்: பெங்களூரு ஆர்.சி.பி.வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலையைச் சேர்ந்த விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தியின் மகள் காமாட்சி தேவி பலியானார்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 17 ஆண்டுகள் தொடர் தோல்விக்கு பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முன்னதாக கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இந்த பேரணியில் திருப்பூரை சேர்ந்த காமாட்சி (வயது 27) என்கிற பெண் ரசிகையும் கழந்துகொண்டார்.

இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் சின்னசாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த காமாட்சி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பெங்களூரு ஆர்.சி.பி.வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Bangalore R. C. ,B. Tiruppur ,Tiruppur ,Bangalore ,R. C. B. Kamatsi Devi ,Vivekananda School Thalara Murthy ,Udumalai ,Narendra Modi Stadium ,Ahmedabad ,B. L. ,Punjab team ,Dinakaran ,
× RELATED தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை...