- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- எடப்பாடி பழனிசாமி
- பியுஷ் கோயல்
- சென்னை
- பாஜக
- தேர்தல் அலுவலர்
- என்.டி.பி
- பெருமாள் பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- பியுஷ்
- கிண்டி, சென்னை
சென்னை: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்,
2 மணி நேரம் அதிமுக -பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக -பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது.
நண்பர் மற்றும் சகோதரர் எடப்பாடி பழனிசாமி: பியூஷ் கோயல்
நண்பர் மற்றும் சகோதரர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.
2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்
2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் என்.டி.ஏ. ஆட்சி.
எடப்பாடி தலைமையில் தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம். பிரதமர் மோடியின், தலைமையின் வழிகாட்டுதலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.
தேர்தல் – ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்: எடப்பாடி பழனிசாமி
கூட்டணிக் கட்சிகள் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்று கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அணிகள் இணைப்பு, கூட்டணி விரிவாக்கம், தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு எடப்பாடி பதிலளிக்காமல் சென்றார்.
