×

வளர்ச்சித் திட்டப் பணிகளில் தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்..!!

சென்னை: வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் பெருமிதம் தெரிவித்துள்ளார். தென் இந்தியாவின் வர்த்தக இயந்திரமாகத் திகழ்ந்து வருகிறது வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம. இந்த நிதியாண்டில் 50 மில்லியன டன் சரக்குகளையும், 1 மில்லியன் டிஇயு சரக்குபெட்டகங்களையும் கையாளும் இலக்குடன், சரக்கு கையாளுதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

உட்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக தேவைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இந்தியா தொலைநோக்கு பார்வை 2030 ஆகிய முயற்சிகளுடன் ஒருங்கிணைந்து துறைமுகம் திட்டங்களை விரைவாக மற்றும் திறமையாக செயல்படுத்துவதில் தேசிய அளவில் தன்னை ஒரு முன்மாதிரியாக நிலை நிறுத்தி வருகிறது. கடந்த வருடத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முக்கியமான மேம்பாட்டுப் பணித்திட்டங்களை மேற்கொண்டு, தனது சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தியுள்ளது.

அவைகளுள் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 7 லட்சம் டிஇயு-க்களைக் கையாளும் திறனையுடைய ஒரு புதிய சரக்குபெட்டக முனையத்தை அமைத்தல், 7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனையுடைய பொது சரக்குகளை கையாளும் முனையத்தை அமைத்தல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறை ஆலையைத் துவங்கியதின் மூலம் பசுமை ஆற்றல் மாற்றத்தைத் தழுவிய நாட்டின் முதல் இந்திய துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விளங்குகிறது. துறைமுகம, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா திட்டங்களுக்காக 501 ஏக்கர் நிலத்தை ஓதுக்க, அதன் மூலம் ரூ.41,860 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது குறிப்பித்தக்கது.

தூத்துக்குடியின் சுற்றுவட்டாரங்களில் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் வகையில் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான வின்பாஸ்ட், சூரிய மின் பலகைகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான விக்ரம் சோலார் மற்றும் டாடா சோலார், தூத்துக்குடி தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் மரச்சாமான்கள் பூங்காவில் அமைந்துள்ள மரச்சாமான்கள் தொழிற்சாலை, காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள் தொழிற்சாலை, வரவிருக்கும் கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகன உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்றவைகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது.

கிழக்கிந்திய கடற்கரையில, ஒரு பிரத்தியேகமான கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது பார்த்தல் வசதியைக வ.உ.சிதம்பரனார் துறைமுகப்பகுதியில் ஏற்படுத்தும் பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிழக்கிந்திய துறைமுகங்களுள் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுமையான கடற்சார் வர்த்தக மையமாக திகழும். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குபெட்டக போக்குவரத்தின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு வெளிதுறைமுக திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 4 மில்லியன் டிஇயு சரக்குபெட்டகங்களை கையாளும் திறனையுடைய 2 சரக்குப்பெட்டக முனையங்களையுக் கொண்ட இத்திட்டம்,, 1 கிலோ மீட்டர் நீளமும் 16.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டதாக இருக்கும்.

துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, தூத்துக்குடியின் எல்லா காலநிலைகளையும் தாங்கும் சுற்றுச்சூழல் அமைப்பும், கட்டுமானப் பொருட்கள் எளிதாக கிடைத்தலும், சிறந்த பணி கலாச்சாரமும, சரியான திட்டமிடுதலும், இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலும், துறைமுகத்தினுள் உள்ள துறைகளுக்கு இடையே உள்ள சிற்ப்பான ஒருங்கிணைப்பும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று கூறினார்.

பணித்திட்டங்களின் வளர்ச்சியினை கண்காணிக்க கட்டமைக்கப்பட்ட அமைப்புகளை துறைமுகம் உருவாக்குகிறது என்றும் இந்த அனைத்து முயற்சிகளும், முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாகவும், திட்டமிட்ட விதமாகவும் செயல்படுத்துவதற்கு ஒரு தளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் துறைமுகத்தினால் இந்தியாவின் கடல்சார் வர்த்தக வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்கினை அடைதலுக்கு பங்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post வளர்ச்சித் திட்டப் பணிகளில் தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Port Authority ,Thoothukudi VOC Port ,Chennai ,Authority ,Susantha Kumar Purohit ,VOC Chidambaranar Port Authority ,South India ,The Port Authority ,Dinakaran ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...