×

இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்டவர்கள்: மாணவி வழக்கு தீர்ப்பு குறித்து முதல்வர் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டு சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையின்போது, உயர் நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனையை பெற்றுத் தந்திருக்கிறோம். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் ‘நிவாரணம்’ உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன்.

The post இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்டவர்கள்: மாணவி வழக்கு தீர்ப்பு குறித்து முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Tamil Nadu Police ,High Court ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டு...