×

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழ்நாட்டு வீரர் குகேஷ் அசத்தல்!

நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழ்நாட்டு வீரர் குகேஷ் அசத்தியுள்ளார். 6வது சுற்றில் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் இன்று நடந்த 6வது சுற்றி ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் குகேஷ் எதிர்கொண்டார்.

உலகின் நம்பர் 1 செஸ் வீரராக உள்ள கார்ல்சனுக்கும் உலக செஸ் சாம்பியன் குகேசுக்கும் இடையேயான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார வெற்றிபெற்றார்.

இந்த தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றிபெற்ற நிலையில், 2வது ஆட்டத்தில் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளை, 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழ்நாட்டு வீரர் குகேஷ் அசத்தல்! appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Magnus Carlsen ,Norway Chess Series ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் இன்று 4வது டி.20 போட்டி:...