×

இலங்கையில் ஊழல் வழக்கில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு சிறை

கொழும்பு: இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வகைசெய்வதற்காக விளையாட்டு உபகரணங்களை வாங்கியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் விளையாட்டுத்தறை அமைச்சர் மஹிந்தானந்த் அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக துறை அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இருவர் மீதும் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

இதில், மஹிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post இலங்கையில் ஊழல் வழக்கில் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Former ,Sports Minister ,Mahindanand Aluthgamage ,Commerce Minister ,Nalin Fernando ,Mahinda Rajapaksa ,2015 presidential election ,Dinakaran ,
× RELATED பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு...