×

ஒசூரில் ரூ.210 கோடியில் தொழில் பூங்கா அமைக்கிறது பனட்டோனி நிறுவனம்

ஒசூர்: ஒசூரில் ரூ.210 கோடியில் தொழில் பூங்காவை பனட்டோனி நிறுவனம் அமைக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு பனட்டோனி ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. ஒசூரில் 25 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க பனட்டோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தொழில் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒசூரில் தொழில் பூங்கா அமைக்கிறது. ஏற்கெனவே டெல்லியில் 3.60 லட்சம் சதுர அடியில் தொழில் பூங்காவை அமைத்து வருகிறது. சில மாதங்களில் கட்டுமான பணி தொடங்கும் என பனட்டோனி இந்தியா நிறுவன மேலாண் இயக்குநர் சந்தீப் சந்தா கூறியுள்ளார்.

The post ஒசூரில் ரூ.210 கோடியில் தொழில் பூங்கா அமைக்கிறது பனட்டோனி நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Panatoni ,Osur ,OSSEUR ,PANTONI ,RS 210 CRORE ,United States ,Ozur ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை