×

திருவனந்தபுரத்தில் ரோகிணி கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி

 

அஞ்சுகிராமம், மே 28: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் 40 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த தொழில்துறை பயிற்சி என்பது கல்வி நிறுவனங்களில் இருந்து பயிற்சி பெறும் மாணவர்கள், உண்மையான தொழில் சூழலில் அனுபவம் பெற நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்யும் ஒரு முறையாக இருந்தது.

இதில் அனுபவம் மிக்க பேராசிரியர்களுடன் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் கம்பெனியில் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி கொடுத்த பேராசிரியர் ராஜசுதன், டாக்டர் ஜே.ரெஜினிஸ், டாக்டர் பின்னி ஆர் விஸ்டன்விச் ஆகியோரையும் ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.ராஜேஷ் ,பேராசிரியர் ஜெயக்குமார், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டினர். இது மாணவர்களுக்கு தொழில் நுட்ப அறிவு மற்றும் தொடர்பு திறன்களை வளர்க்க உதவும் வகையில் அமைந்தது.

The post திருவனந்தபுரத்தில் ரோகிணி கல்லூரி மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Rohini College ,Thiruvananthapuram ,Anjugramam ,Rohini Engineering and Technology College ,Palkulam ,Rohini Engineering College ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...