×

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: விடுமுறை காலம் என்பதனாலும், பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் அதிகம் கூடும் காலம் என்பதனாலும், கொரோனா தொற்று பரவி வரும் காரணமாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பொது சுகாதாரத்துறை சட்டத்தின்கீழ் சில அறிவுரைகள் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி, திருவிழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள், குடிநீர், ஜூஸ் போன்றவற்றின் சுகாதார தன்மையை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கோயில் அன்னதானங்களில் எவ்வாறான சுகாதர முறை பின்பற்றப்படுகிறது என்பதையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பிட வசதிகள், பாதுகாப்பான சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மழை காலம் முன்னதாகவே தொடங்கியதன் காரணமாக தொற்று நோய் பாதிப்புகளும் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

The post பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Department of Public Health ,Chennai ,Director of Public Health ,Shelva Vinayagam ,Corona epidemic ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...