×

அசாம் எல்லை அருகே உல்பா தளபதி கைது

டின்சுகியா: இந்தியாவில் இருந்து அசாம் மாநிலத்தை பிரித்து தனி நாடு உருவாக்க வலியுறுத்தி உல்பா தீவிரவாத அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. இதையடுத்து உல்பா தீவிரவாத அமைப்புக்கு கடந்த 1990ம் ஆண்டு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட உல்பா அமைப்பை சேர்ந்த ரூபாம் அசோம் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ரூபாம் அசோம் 2018ம் ஆண்டு போர்டும்சா காவல்நிலைய பொறுப்பாளர் பாஸ்கர் கலிதா கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர்.

The post அசாம் எல்லை அருகே உல்பா தளபதி கைது appeared first on Dinakaran.

Tags : ULFA ,Assam border ,Tinsukia ,Assam ,India ,Union government ,Dinakaran ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்