×

சங்கரன்கோவில் அருகே ஆண்டிநாடானூரில் ரூ.4.5 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிட பணி

சங்கரன்கோவில்,மே 25: சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலம் ஊராட்சி ஆண்டி நாடானூர் கிராமத்தில் ஊராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுப் பணி நடந்தது. ஊராட்சி தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு ரேஷன் கடை கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பட்டாடைகட்டி பஞ்சாயத்து தலைவர் சுமதி கனகவேல், ஒன்றிய துணை செயலாளர் வினுசக்கரவர்த்தி, கிளைச் செயலாளர்கள் செல்லப்பா, மணி, சார்லஸ், கடற்கரைசாமி, ராக்கையா, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி, ஒன்றிய பொருளாளர் பண்டாரக்கண்ணு, ஒன்றிய பிரதிநிதி சேவியர், பாக முகவர் ராஜேந்திரன், வர்த்தக அணி மகேஷ், நவமணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவில் அருகே ஆண்டிநாடானூரில் ரூ.4.5 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிட பணி appeared first on Dinakaran.

Tags : Andinathanur ,Sankaranko ,RATION ,URATCHI ,KULASEKARAMANGALAM ,ANDI ,Vamthurai ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்