×

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, டிச.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற நாளை (31 ம் தேதி) கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ) சீர்மரபினர்(சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.ம மூன்றாண்டு இளங்கலை மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும்மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: 2025-26ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ, மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள எண் மூலம் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

மாணக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற மாணாக்கர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க 31ம் தேதி நாளை கடைசி நாள் என தெரிவித்துக்க பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

கலை பிரிவில் 65 மாணாக்கர்களும் , விளையாட்டு பிரிவில் 70 மாணாக்கர்களும் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றிபெற்ற 36 மாணவர்கள், 99 மாணவிகள் என மொத்தம் 135 மாணாக்கர்களுக்கும் பதக்கங்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன. திருமயம்.டிச.30: திருமயத்தில் நடைபெறும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் வெண்புறா கபடி கழகம் சார்பில் கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு வைகுண்ட ஏகாதேசிய முன்னிட்டு 40ம் ஆண்டு மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே நேற்று மாலை தொடங்கிய முதல் போட்டியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

அப்போது விளையாட்டில் கலந்து கொண்ட வீராங்கனைகளிடம் பாதுகாப்பாக போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், பொறியாளர் அணி ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர், விவசாய அணி சிவகுமார், தொண்டரணி சாமி சுரேஷ், ஒன்றிய விளையாட்டு அணி நீலமேகம் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகள் வெண்புறா கபடி கழகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Tags : Pudukkottai ,District Collector ,Aruna ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்