தஞ்சாவூர், டிச. 30: 2025ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய டிஐஜியும், எஸ்பியும் அறிவுறுத்தினர். இதில் அனைத்து உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
