×

பாப்பாநாடு பகுதியில் இன்று மின் நிறுத்தம்

பட்டுக்கோட்டை, மே 23: பட்டுகோட்டை மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுகோட்டை அடுத்த கரம்பயம் துணை மின் நிலையத்தில் இந்த மாதத்திற்கான பருவகால பராமரிப்பு பணிகள் இன்று (23ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதனால் கரம்பயம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டுக்குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

The post பாப்பாநாடு பகுதியில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Pappanad ,Pattukottai ,Pattukottai Electricity Board ,Assistant Executive Engineer ,Manoharan ,Karambayam Sub-station ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்