×

மயிலாடுதுறையில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

 

மயிலாடுதுறை, மே 23: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் உள்ளது சாய் விளையாட்டு அரங்கத்திலுள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலைக்கு அவரது 34ம் ஆண்டு நினவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். நிகழச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் சரத் சந்திரன், மாநில பொதுகுழு உறுப்பினர் இராஜேந்திரன், நகர தலைவர் இராமனுஜம் மற்றும் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் மாற்று கட்சியிலிருந்து இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

The post மயிலாடுதுறையில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Memorial Day ,Mayiladuthurai ,Congress ,Rajiv Gandhi ,Sai Sports Complex ,Mayiladuthurai Rajan Garden ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்