- திருச்செங்கோடு
- ஜி.டி.சி.எம்.எஸ்.
- சித்தலந்தூர்
- ஓமலூர்
- சங்ககிரி
- பரமத்தி சாலை
- நாமக்கல்
- நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு
- பள்ளிபாளையம் பிரிவு
திருச்செங்கோடு, மே 23: நாமக்கல், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பிரிவிற்கு உட்பட்ட ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலையில், முதலமைச்சரின் காலை விரிவாக்க திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு ஜிடிசிஎம்எஸ் முதல் சித்தாளந்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ.59. 15 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், ஆய்வு செய்தார். பணிகளை குறிப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.ஆய்வின் பொழுது நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா மற்றும் உதவி கோட்ட பொறியாளர் திருச்செங்கோடு நடராசன் மற்றும் உதவி பொறியாளர் உடன் இருந்தனர்.
The post திருச்செங்கோட்டில் சாலைப் பணிகளை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

