×

விபத்துகளை தடுக்க வேகத்தடை அவசியம்

திருச்சங்கோடு, டிச.23: அர்த்தநாரீஸ்வரர் கோயில் கிரிவல பாதையில், அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க வேக்தடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையை சுற்றி, 3.5 கிமீ தூரம் கிரிவல பாதை உள்ளது. இது நாமக்கல் மற்றும் வேலூர் பிரதான சாலைகளை இணைக்கிறது. நாமக்கல் மற்றும் ராசிபுரம் பக்கம் இருந்து வரும் வாகனங்கள், வேலூர், ஈரோடு, செல்ல இந்த கிரிவல பாதையை பயன்படுத்துகின்றன. இந்த கிரிவலப் பாதையில் உள்ள மேடான பகுதி வளைவாக உள்ளது. கூனான்டிகாடு பிரிவு பகுதியில் உள்ள இந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த பகுதிக்கு குடியிருப்புகளுக்கான இணைப்புச்சாலைகள் செல்கின்றன. எனவே, விபத்தை தடுக்க மேடான பகுதியை கரைத்து சமன் செய்திட வேண்டும். அல்லது இப்பகுதியில் காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்க வேண்டும். அதே போல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruchengode ,Ardhanareeswarar Temple ,Girivala ,Ardhanareeswarar Tirumala ,Thiruchengode.… ,
× RELATED திருச்செங்கோட்டில் 2,106 தேர்வர்கள் பங்கேற்பு