×

ஊத்தங்கரையில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி

ஊத்தங்கரை, மே 23: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், புதிய எடை மெஷின், பி.ஓ‌.எஸ் மெஷின் இணைப்பு தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால் தலைமையில், கூட்டுறவு சார் பதிவாளர்கள் தர், கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா இன்ஜினியர் மணி, எடை இயந்திர இன்ஜினியர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பி.ஓ.எஸ் மீஷினை எப்படி இயக்குவது, எடை மெஷின் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். கூட்டத்தில் நுகர்வு மேலாளர் பத்ராசலம் மற்றும் ஊத்தங்கரை, மத்தூர் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊத்தங்கரையில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Mathur ,Uthankarai Town Panchayat Wedding Hall ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்