- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை அரசு மருத்துவமனை
- மதுரை
- டீன் அருள் சுந்தரேஸ்குமார்
- ஆர்.எம்.ஓக்கள்
- சரவணன்
- முரளிதரன்
- லதா
- தின மலர்
மதுரை, மே 22: தென் மாவட்ட மக்களின் நோய் தீர்க்கும் சிறப்பான பணியை, மதுரை அரசு மருத்துவமனை செய்து வருகிறது. டீன் அருள் சுந்தரேஸ்குமார், ஆர்எம்ஓக்கள் சரவணன், முரளிதரன், லதா உள்ளிட்டோர் தலைமயைில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலத்திலேயே முதல் முயற்சியாக விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் நிலைமை குறித்த பதற்றத்துடன் இருக்கும் உறவினர்களுக்கு முழுமையாக தகவல் அளிக்கும் வகையில் ‘துயர்நிலை ஆலோசகர்கள்’ மதுரை அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உதவி மையம் இன்று (மே 22) முதல் செயல்பட துவங்குகிறது. இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘விபத்து உள்ளிட்டவற்றால் பாதித்து சிகிச்சைக்கு வருவோர் தீவிர, அதிதீவிர மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, அவர்களது தற்போதைய நிலை குறித்து உறவினர்கள் உள்ளிட்டோர் அறிய முடியாமல், பதற்றம் அடைகின்றனர். சிகிச்சை பணியில் இருக்கும் டாக்டர்களால் அவர்களிடம் முழுயைான தகவல்கள் அளிக்க முடியாது. எனவே, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, அவர்களின் நிலை உள்ளிட்ட தகவல்களை அவர்களின் உறவினர்களிடம் தெரிவிக்கும் வகையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவில் துயர்நிலை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உதவி மையத்தை டீன் அருள் சுந்தரேஸ்குமார் மே 22ல் (இன்று) தொடங்கி வைக்கிறார். இங்கு 20 ஆண்டுகள் அனுபவமிகு செவிலியர்கள் பணியில் இருப்பர். இவர்களது ஊதியச் செலவினை மதுரை தனியார் சேவை அமைப்பு ஏற்கிறது” என்றார்.
The post தமிழ்நாட்டில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் துயர்நிலை ஆலோசகர் நியமனம் appeared first on Dinakaran.
