×

அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடம்

அரியலூர், மே 22: அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.8.04 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்றத் உறுப்பினர் சின்னப்பா கலந்து கொண்டு, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.8.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டிடத்தில் 20 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆழ்துளை கிணறுகள், 2 கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்படுவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Government Arts College ,Ariyalur ,MLA Chinnappa ,
× RELATED செட்டிகுளம் முருகன் கோயில் உண்டியலில் ரூ.9.62 லட்சம் காணிக்கை