×

கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா

பெரம்பலூர், டிச.31: 30.12.2025 அன்று பெரம்பலூர் மாவட்டம் R.1227 கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பேரவை கூட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம் முகாம் மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிதிசார் கல்வித்திட்டம் முகாம் நடைபெற்றது. அதில் நிதிசார் கல்வித்திட்டம் பற்றி கள மேலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து முன்னாள் சங்க தலைவர் கோவிந்தசாமி என்பவர் சங்கத்தின் வளர்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து சங்க லாபத்தில் 2019-2020, 2020-2021 ஆண்டிற்கான 14% ஊக்க தொகையை கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாட்சியர் த.கௌசிகன் சங்க தலைவர் கோவிந்தசாமி என்பவருக்கு ரூ.8120 க்கான பற்று சீட்டு வழங்கினார். அருகில் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ரவி, சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Tags : Kalpadi Primary Agricultural Cooperative Credit Union ,Perambalur ,R.1227 ,Perambalur District ,Perambalur District Cooperative Union ,Trichy District Central Cooperative Union ,
× RELATED புத்தாண்டை முன்னிட்டு விஆர் குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்