×

மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: ஸ்ரீகாந்த் வேகத்தில் வீழ்ந்த சீன வீரர்; 2ம் சுற்றுக்கு முன்னேறினார்

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, சீனாவை சேர்ந்த, மலேசியா மாஸ்டர்ஸ் போட்டிகளில் 6ம் நிலை வீரரான லு குவாங் ஸுவை, இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் (32) வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். மலசேியா தலைநகர் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் சீன தைபே வீரர் ஹுவாங் யு காய் உடன் மோதி, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அபார வெற்றி பெற்றார். அதனால் பிரதான போட்டியில் ஆட தகுதி பெற்ற அவர் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சீனாவை சேர்ந்த லு குவாங் ஸு உடன் மோதினார்.

இப்போட்டியில் முதல் செட்டை போராடி கைப்பற்றிய ஸ்ரீகாந்த், 2வது செட்டை எளிதில் பறிகொடுத்தார். இருப்பினும், 3வது செட்டில் சுதாரித்து ஆடிய அவர், அந்த செட்டை அநாயாசமாக வசப்படுத்தினார். அதனால், 23-21, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த், 2021ம் ஆண்டு நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, கனடா வீரர் பிரையன் யாங் மோதினர். இப்போட்டியில் அபாரமாக ஆடிய ஆயுஷ், 20-22, 21-10, 21-8 என்ற செட் கணக்கில் வென்று 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

* மகளிர் பிரிவில் சிந்து தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து (29வயது, 16வது ரேங்க்), வியட்நாமின் துய் லின் நுயென் (27வயது, 26வது ரேங்க்) நேற்று மோதினர்.
முதல் செட்டை நுயென் 21-11 என்ற புள்ளி கணக்கிலும், 2வது செட்டை சிந்து 21-14 என்ற புள்ளிக் கணக்கிலும் கைப்பற்றினர். அதனால் வெற்றியை முடிவு செய்ய நடந்த 3வது செட்டில் நுயென் 21-15 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் சிந்துவை, துய் லின் நுயென் வீழ்த்தினார். இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த இந்தியா ஓபனில் மட்டுமே, சிந்து காலிறுதி வரை முன்னேறினார். அதன் பிறகு அவர் விளையாடிய இந்தோனேசியா மாஸ்டர்ஸ், ஆல் இங்கிலாந்து ஓபன், சுவிஸ் ஓபன் என அனைத்திலும் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி வருகிறார்.

The post மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: ஸ்ரீகாந்த் வேகத்தில் வீழ்ந்த சீன வீரர்; 2ம் சுற்றுக்கு முன்னேறினார் appeared first on Dinakaran.

Tags : Masters Badminton ,Srikanth ,Kuala Lumpur ,Malaysia Masters Badminton ,Kidambi Srikanth ,Lu Guangxu ,Malaysia Masters ,Malaysia… ,Dinakaran ,
× RELATED 3 குழந்தைகள் உள்ள நிலையில் பாக்....