×

100 சதவீத தேர்ச்சி வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் விபரங்களை அனுப்பி வைக்க உத்தரவு

நாகர்கோவில், மே 22: பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க 2024-25ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மாவட்டங்களில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் விபரங்களை தொகுத்து மே 22ம் தேதிக்குள் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 100 சதவீத தேர்ச்சி வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் விபரங்களை அனுப்பி வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Director of School Education ,Kannappan ,Minister of School Education ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்