- சுவாமி
- கட்தூர்
- காட்டூர் காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா
- காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா
- காட்டூர்,
- தர்மபுரி மாவட்டம்
கடத்தூர், மே 22: கடத்தூர் காளியம்மன், மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, சுவாமி வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த காளியம்மன், மாரியம்மன் கோயில் விழா நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் நேற்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கடத்தூர் பஸ் நிலையம், தர்மபுரி -பொம்மிடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் சிவன், லட்சுமி, சரஸ்வதி, பத்ரகாளி உள்ளிட்ட சுவாமிகள் போல் வேடமணிந்து பம்பை, மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் கடத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதனை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post சுவாமி வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலம் appeared first on Dinakaran.
