- எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்-
- சென்னை
- விஐடி
- தமிழ்
- தமிழ்நாடு
- டாக்டர்
- எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
- விஐடி பல்கலைக்கழகம்
- துணை ஜனாதிபதி
- ஜி.வி.செல்வம்
- டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்…
- தின மலர்

சென்னை: செயற்கை நுண்ணறிவு சார்ந்த சுகாதாரம் தொடர்பான ஆராய்ச்சிக்காக விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் விஐடி பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கே.நாராயணசாமி கையெழுத்திட்டனர். நிகழ்வில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகர் ச.ப.தியாகராஜன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிவசங்கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிஎச்டி மேற்பார்வை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்களை சமர்ப்பித்தல், கூட்டு வெளியீடுகள், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் காப்புரிமை ஆகியவற்றை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்படும். விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை சுகாதாரத்துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும்.
The post சுகாதாரம் தொடர்பான ஆராய்ச்சி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை-விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.
