×

அரபிக் கடலில் உருவாகிறது சக்தி புயல்

சென்னை: வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் இரண்டு வளி மண்டல காற்று சுழற்சிகள் உருவாகி கடந்த சில நாட்களாக மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் பெரும் மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையும் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுப்பெற்று 22ம் தேதியில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று 25 அல்லது 26ம் தேதியில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது.

The post அரபிக் கடலில் உருவாகிறது சக்தி புயல் appeared first on Dinakaran.

Tags : Arabian Sea ,Chennai ,Bay of Bengal ,Karnataka ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...