×

எஸ்.ஐ., ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம், மே 21: சேலத்தை அடுத்துள்ள மல்லூர் காவல்நிலையத்திற்கு வரும் புகார்களை அங்கு பணியில் இருக்கும் எஸ்ஐ நந்தகுமார் சரிவர விசாரிப்பதில்லை என்ற புகார் எழுந்தது. நேற்று முன்தினம், சிறுவன் மாயம் தொடர்பாக வந்த புகாரை உடனடியாக விசாரிக்கவில்லை என ஊர் மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் முடிவில் எஸ்ஐ நந்தகுமார், இரண்டாம் நிலை காவலர் தங்கதுரை ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி எஸ்பி உத்தரவிட்டார். உடனடியாக இருவரும் ஸ்டேஷன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலையே ஆயுதப்படைக்கு சென்றனர்.

The post எஸ்.ஐ., ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : SI ,Armed Police Force ,Salem ,Nandakumar ,Mallur police station ,Dinakaran ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்