×

புதிய சாலை அமைக்க பூமி பூஜை

கோபி,மே.20: கோபி அருகே உள்ள கடுக்காம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சீரங்க கவுண்டன் புதூரில் 100க்கும் மேற்பட்ட குடெம்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் பழுதடைந்த நிலையில் சீரமைத்து தருமாறு அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து இங்கு ஆய்வு செய்த எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், பழுதடைந்த சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுத்தார். அதைத்தொடர்ந்து அந்தியூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post புதிய சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Gopi ,Seeranga Counton Puthur ,Kadukkam Palayam panchayat ,Anthiyur MLA ,A.G. Venkatachalam ,
× RELATED கெஞ்சனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்கம்