- 26வது அரசாணை விழா
- மனு
- சக்தி தேவி அறக்கட்டளை
- ஈரோடு எஸ்பி அலுவலகம்
- ஈரோடு
- 26வது அரசாணை விழா
- சக்தி மசாலா
- ஈரோடு சக்தி துரைசாமி திருமண வீடு
- சரோஜா சுந்தர்ராஜ்
ஈரோடு, டிச. 23: சக்தி மசாலா நிறுவனங்களின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் 26வது ஐம்பெரும் விழா நேற்று மாலை ஈரோடு சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது. சரோஜா சுந்தரராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர்.
துரைசாமி வரவேற்புரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கௌரவக் கொலை தடுப்பு ஆணையத்தின் தலைவருமான பாட்ஷா கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு சக்தி மருத்துவமனை மருத்துவர்களுக்கு நினைவுப்பாிசுகளை வழங்கியும், சக்திதேவி அறக்கட்டளையின் தளிர் திட்டம் மூலம் மரக்கன்றுகளை பராமாித்து வளர்த்து வந்த தனிநபர்கள் நிறுவனங்களுக்கு மரங்களின் காவலர் விருதினை வழங்கியும், அரிமா அறக்கட்டளை இல்ல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும், வனம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் ஏ.சுந்தரராஜ் சுற்றுச்சூழல் துறையில் சாதனைகள் பல புரிந்தமைக்காக சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியும், சக்திதேவி அறக்கட்டளையின் ஆண்டு மலரை வெளியிட்டும், சேவை அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியும் விழா பேரூரையாற்றினார். ஏ.சுந்தரராஜ் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுக்கொண்டு ஏற்புரை வழங்கினார்.
விழாவில் மாநில நிதிக்குழுவின் தலைவர் அலாவுதீன் மற்றும் சிறுதுளி அமைப்பு அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2024-2025 ம் கல்வி ஆண்டில் அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாிசுகள் வழங்கினர். திண்டல், பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் உயர்கல்வி உதவித்தொகை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில், மாணவ மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு ரூ.1,49,01,250 மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தீபா செந்தில்குமார் நன்றி கூறினார். சாந்தி துரைசாமி, செந்தில்குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
