- ஈரோடு
- ஈரோடு வடக்கு போலீசார்
- எல்பாளையம் வீதி
- மொக்கையம்பளையம் பிரிவு
- ஈரோடு, வீரப்பன் சத்ரம் மரப்பன் ரோட்
ஈரோடு, டிச.24: ஈரோடு வடக்கு போலீசார் நேற்று முன்தினம் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட எல்லப்பாளையம் ரோடு, மொக்கையம்பாளையம் பிரிவு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில், அவர் ஈரோடு, வீரப்பன் சத்திரம் மாரப்பன் வீதியைச் சேர்ந்த சிவா (30) என்பது தெரியவந்தது.
மேலும், அவரை சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.32,250 மதிப்பிலான 3.250 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
