×

வேதாரண்யம் தாலுக்கா செண்பகராயநல்லூர்-ஆயக்காரன்புலம் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

வேதாரண்யம், மே 16: வேதாரண்யம் தாலுகா செண்பகராய நல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் முதல் ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி வரையிலான சாலையில் நாகப்பட்டினம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டம் மூலம் சாலையை அகலப்படுத்தி தரம் உயர்த்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்தணிக்கை ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் தமிழழகன், உதவிக் கோட்டப்பொறியாளர் சுந்தர்ராசு, உதவிப் பொறியாளர் அருண்குமார் ஆகியோர் சாலையின் தரம் குறித்து உள் தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியின்போது நாகப்பட்டினம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டம் மன்னார்குடி உட்கோட்டத்தை சேர்ந்த பொறியாளர்கள் உடனிருந்தனர்.

The post வேதாரண்யம் தாலுக்கா செண்பகராயநல்லூர்-ஆயக்காரன்புலம் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam taluk ,Chenpakarayanallur ,Aayakkaranpulam ,Vedaranyam ,Vedaranyam taluk Chenpakarayanallur Panchayat Office ,Nagapattinam NABARD and Rural Roads Department ,taluk ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்