×

30 ஆண்டாக தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கிறது: பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத மையங்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில் 10ம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், பிரிட்டிஷ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பதை ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் தனது செயல்களுக்கு பெரிய விலை கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,‘‘ இந்தியாவுடனான போர் நிறுத்தம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பிரச்னைகளை தீர்க்க ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் ’’ என்றார்.

The post 30 ஆண்டாக தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கிறது: பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Defense Minister ,Islamabad ,Kashmir ,Pahalgam ,Indian Army ,Operation Sindoor ,Indian Air Force ,Kashmir.… ,Dinakaran ,
× RELATED ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடியா வீரர்களை விடுவித்தது தாய்லாந்து!!