×

சவுதி திடீர் தாக்குதலால் ஏமனில் போர் பதற்றம்: படைகளை வாபஸ் பெற்றது ஐக்கிய அமீரகம்

துபாய்: ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தொடக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக இரு நாடுகளின் நோக்கங்களும் மாறுபட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) என்ற பிரிவினைவாத குழு, சமீபத்தில் பெரும் தாக்குதலை நடத்தி ஏமனின் 52 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றியது. இதனால் ஏமன் அரசுக்கு ஆதரவளிக்கும் சவுதி அரேபியாவிற்கும், பிரிவினைவாதிகளுக்கு உதவும் அமீரகத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

இந்நிலையில் தெற்கு ஏமனில் உள்ள முகல்லா துறைமுகம் அருகே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கப்பல் மீது சவுதி கூட்டுப்படை திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து ஏமன் அதிபர் கவுன்சில் தலைவர் ரஷாத் அல்-அலிமி, அமீரகத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், ‘24 மணி நேரத்திற்குள் படைகள் வெளியேற வேண்டும்’ என்று கெடு விதித்தார். இந்த நிலையில் மோதலை தவிர்க்கும் வகையில்,ஏமனில் எஞ்சியிருக்கும் தனது தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவை திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

Tags : Yemen ,Saudi ,United ,Arab Emirates ,Dubai ,Saudi Arabia ,Houthi ,United Arab Emirates ,
× RELATED 600 கிலோ எடையுடன் வாழ்ந்த உலகின் மிகக் குண்டு மனிதர் மரணம்