×

ரஷ்ய அதிபர் புடினை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி


அபுதாபி: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுபயணத்தை முடித்து கொண்டு அமெரிக்காவுக்கு நேற்று புறப்பட்ட அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘அமைதி பேச்சுவார்த்தையில் புடின் கலந்து கொள்ளாதது ஆச்சரியம் இல்லை. நான் செல்லாததால் அவர் வராமல் இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் விரைவில் புடினை சந்தித்து பேசுவேன்’’ என்றார்.

The post ரஷ்ய அதிபர் புடினை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PUTIN ,TRUMP ,ABU DHABI ,US ,PRESIDENT ,UKRAINE ,RUSSIA ,President Trump ,United States ,Middle East ,
× RELATED முக்கிய பொருளாதார பாதையில்...