×

கணவருடன் சேர்ந்து கவர்ச்சி ‘அட்ராசிட்டி’; பிரபல மாடல் அழகி மேலாடையின்றி கும்மாளம்: சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்

செயின்ட் பார்ட்ஸ்: பிரபல மாடல் அழகி ஹைடி கிளாம் தனது கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில், மேலாடையின்றி கடலில் குளித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான ஹைடி கிளாம், எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு கூட மேலாடையின்றி வெயிலில் படுத்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், தனது வீட்டில் நண்பர்கள் வரும்போது ஆடையின்றி இருப்பதை பார்த்து தனது குழந்தைகள், ‘அம்மா, சட்டை போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறியதாக அவரே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

பொது இடங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஆடை விஷயத்தில் அவர் எந்த கட்டுப்பாடும் இன்றி இருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது கணவர் டாம் கவுலிட்ஸ் மற்றும் நண்பர்களுடன் கரீபியன் தீவான செயின்ட் பார்ட்ஸ் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு கடலில் குளிக்கும்போது தான் அணிந்திருந்த பிகினி உடையில் மேலாடையை கழற்றி கரையில் வைத்துவிட்டு, நண்பர்கள் முன்னிலையிலேயே தயக்கம் ஏதுமின்றி கடலில் குளித்துள்ளார். கணவரை கட்டியணைத்தபடியும், மேலாடையின்றியும் அவர் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : Kummalam ,St Barts ,Heidi Glam ,Germany ,
× RELATED இம்ரான் கானின் ஆதரவாளரால் பரபரப்பு;...