டாக்கா: வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் பேகம் கலிதா ஜியா(80) கடந்த 1991 மார்ச் முதல் 1996 மார்ச் வரையும், பின்னர் 2001 ஜூன் முதல் 2006 அக்டோபர் வரையும் வங்கதேச பிரதமராக பதவி வகித்து வந்தார். இதயம், நுரையீரல் தொற்று, கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு, நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கலிதா ஜியா தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கலிதா ஜியா ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எவர்கேர் மருத்துவமனை மருத்துவர் ஜாஹிட் கூறுகையில், “கலிதா ஜியாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் கடந்த 11ம் தேதி முதல் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு உள்ளூர் மற்றும் வௌிநாட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.
