×

முக்கிய பொருளாதார பாதையில் அமைந்துள்ள சோமாலிலாந்து நாட்டை அங்கீகரிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு..!!

முக்கிய பொருளாதார பாதையில் அமைந்துள்ள சோமாலிலாந்து நாட்டை அங்கீகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 19ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்தின் போது ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தெற்கு பகுதியில் இத்தாலியன் காலனியாகவும், வடக்குப்பகுதியில் பிரிட்டனின் காலனியாகவும் இருந்தது. காலனி ஆதிக்கத்திற்கு பிறகு 1960ம் ஆண்டில் இந்த இரண்டு பகுதிகள் இணைந்து சோமாலியா என்ற தனி நாடு உருவானது. ஆனால் ஆரம்பம் முதலே சோமாலிலாந்து என அழைக்கப்பட்ட வடக்குப்பகுதி மக்களுக்கு இந்த இணைப்பில் உடன்பாடில்லை. இதனால் ஏற்பட்ட மோதல் உள்நாட்டு போராக மாறியது.

தொடர்ந்து இந்த மோதல் 1990ம் ஆண்டில் உச்சம் அடைந்த நிலையில் சோமாலியாவிலிருந்து தனி நாடாக பிரிவதாக சோமாலிலாந்து அறிவித்தது. இந்த நாட்டுக்கென தனித்த நாணயம், பாஸ்போர்ட், ராணுவம் ஆகியவை உருவானது. எனினும் இந்த நாட்டில் இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதே நேரம் சோமாலிலாந்துடன் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தைவான் உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியிலான உறவை பேணி வருகின்றன. இந்த நிலையில் சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்து அதற்கான அறிவிப்பை கையெழுத்திட்டுள்ளது.

சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த செங்கடலின் நுழைவு வாயிலான ஏடன் வளைகுடா பகுதியில் இந்த சோமாலிலாந்து அமைந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த நாடக இந்த நாடு பார்க்கப்படுகிறது. அந்த பகுதியில் எந்த நாட்டுடனும் இஸ்ரேலுக்கு பெரிய அளவிலான உறவுகள் இல்லாத நிலையில் இஸ்ரேலின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு சோமாலிலாந்து வரவேற்பை தெரிவித்துள்ளதன் மூலம் அந்த பகுதியில் இஸ் ரேலிய முகாம்கள் அமையவும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இதன் காரணமாக செங்கடல் வணிகத்தை கட்டுப்படுத்தும் வாய்ப்பும் தனது கப்பல்களை தொடர்ந்து தாக்கி வரும் எமனின் ஹொதி அமைப்பின் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் இஸ்ரேலுக்கு அமைந்துள்ளது. இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு அரபு லீக் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரம் சோமாலிலாந்தை அங்கீகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Tags : Israel ,Somalia ,southern ,Britain ,
× RELATED தங்கள் நாட்டில் இந்துக்கள்...