×

மாவட்ட செயலாளர் கூட்டம் நடிகர் விஜய் புறக்கணிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள் என்று அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்குகின்றன. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று நியமித்துள்ள தவெக, தொடர்ந்து அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடந்தது. இந்நிலையில், பனையூரில் நேற்று காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்கவில்லை. இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பனையூரில்தான் விஜய்யின் பங்களா இருக்கிறது. அப்படி இருந்தும் அவர் கூட்டத்துக்கு வராதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கான்பரன்சிங்கிலாவது வந்து விஜய் பேசுவாரா என்று நிர்வாகிகள் எதிர்பார்ப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post மாவட்ட செயலாளர் கூட்டம் நடிகர் விஜய் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu assembly elections ,Tamil Nadu Victory Party… ,
× RELATED சொல்லிட்டாங்க…