×

சாலை விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி, மே 17: தர்மபுரி டவுன் சாலை விநாயகர் கோயில் உள்பட அனைத்து விநாயகர் கோயில்களிலும், நேற்று சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தையொட்டி தர்மபுரி டவுன் சாலை விநாயகர் கோயிலில் மூலவர் விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோயில், செல்வகணபதி கோயில், நெசவாளர் நகர் விநாயகர் கோயில், அன்னசாகரம் விநாயகர் – சிவசுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட, அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

The post சாலை விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Salai Vinayagar Temple ,Dharmapuri ,Sangadahara ,Chaturthi ,Vinayagar ,Dharmapuri Town Salai Vinayagar Temple ,Sangadahara Chaturthi ,Chithirai ,Dharmapuri Town Salai Vinayagar ,Temple… ,Salai Vinayagar ,Temple ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்