×

திருவாரூர் நகராட்சி சார்பில் பேருந்து பயணிகளை பாதுகாக்க பசுைம பந்தல்

திருவாரூர், மே 16: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சியின் சார்பில் கோடை வெயிலில் முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயில் என்பது கடந்த மார்ச் மாதம் முதலே துவங்கி சுட்டெரித்து வருகிறது. இதனையொட்டி சாலைகளில் நடமாடும் பொது மக்கள் குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் கடந்த 4ந் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மாநில முழுவதும் வேலு£ர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் 100 டிகிரி அளவில் வெயில் அடித்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 98 முதல் 100 டிகிரி வரையில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதன் காரணமாக பொது மக்கள், கல்லு£ரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன்படி, நேற்றும் 98.6 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்ததால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்கள் அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் மனிதர்களின் சராசரி உடல் வெப்ப நிலையானது 37 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் அதிக வெப்பம் காரணமாக வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதன் காரணமாக உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறும் போது உப்பு சத்து மற்றும் நீர் சத்து பற்றாகுறை ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக தாகம், தலைவலி, உடல் சேர்வு, தலைசுற்றல், மயக்கம், தசை பிடிப்பு, வலிப்பு போன்றவை ஏற்படுவதுடன் குறைந்த அளவிலான சிறுநீர் மட்டுமே வெளியேறும்.

எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவுதண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமானஅளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடி நீரை எடுத்துச் செல்லவேண்டும். எலுமிச்சை ஜூஸ், இளநீர்,மோர்,புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும். பருவக்கால பழங்கள்,காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்தஉணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்புநிறத்தைதவிர்த்து) எடுத்து செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை மருத்துவர்களும், மாவட்ட நிர்வாகமும் பொது மக்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும் இந்த கோடை வெப்பம் கருதி பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி கோடை பந்தல்கள்அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் கலைஞர் நுழைவாயில் அருகே பேருந்து பயணிகள் வசதிக்காக ஏற்கனவே தகரத்தால் ஆன தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக துணி பந்தல் ஓன்றும் அமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post திருவாரூர் நகராட்சி சார்பில் பேருந்து பயணிகளை பாதுகாக்க பசுைம பந்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Municipality ,Tiruvarur ,Tamil Nadu ,pavilion ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை