×

பொதுமக்களிடம் போதை ஓழிப்பு விழிப்புணர்வு

திருவாரூர், மே 16:திருவாரூர் மாவட்டத்தில் போதைபொருள் ஓழிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
எனவே திருவாரூர் மாவட்டத்தில் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு செய்தல், உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களை தாக்கும் போதைப்பொருள்கள் பயன்பாட்டை தடுத்தல் சமூகத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதிவாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை வரும் 23ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், 3வது தளம், திருவாரூர் -610 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post பொதுமக்களிடம் போதை ஓழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Collector ,Mohanachandran ,Thiruvarur district ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்