- முதல் அமைச்சர்
- திமுக அரசு
- பட்டுக்கோட்டை
- அமைச்சர்
- நேரு
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பன்னவயல் சாலை
- 2026 சட்டமன்றத் தேர்தல்கள்…
- தின மலர்
பட்டுக்கோட்டை, மே 16: 2026லும் தமிழகத்தில் திமுக அரசு அமைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம் என அமைச்சர் நேரு திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பட்டுக்கோட்டையில் பண்ணவயல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக தேர்தல் மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு தலைமை வகித்தார்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல் வரவேற்றார். முடிவில் பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, பேராவூரணி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுபசரவணன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், திமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக தேர்தல் மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு பேசியதாவது:
சுமார் 75ஆண்டுகளுக்கு மேல் திமுக என்ற இயக்கத்தை வழிநடத்தி கலைஞர் காப்பாற்றி இருக்கிறார். அவர் ஏற்றிவைத்த விளக்கை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது தலையாய கடமை என்பதை மனதில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். அடுத்து வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று ஆணித்தரமாக நமது தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருக்கிறார்கள். எனவே அவருடைய கரத்தை வலுப்படுத்த, அவருடைய எண்ணத்தை நிறைவேற்ற நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்தார்.
The post 2026லும் திமுக ஆட்சி அமைய முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவோம் appeared first on Dinakaran.
