×

பேராவூரணியில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடக்கம்

பேராவூரணி, மே. 16: பேராவூரணி தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி தொடங்கியது தனித்துணை கலெக்டர் பூஷண குமார் தலைமை வகித்தார். வருகிற 20ம்தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் பேராவூரணி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் வருவாய் தீர்வாய நாட்களில் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தீர்வு காணலாம். வரும் 20 ம்தேதி மாலை 4 மணிக்கு ஜமாபந்தி நிறைவாக, குடிகள் மாநாடு தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கவிதா, மண்டல துணை தாசில்தார் அருண், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜமாணிக்கம், கூடுதல் தலைமை இடத்து துணை தாசில்தார் சீனிவாசன் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணியில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Peravoorani ,Peravoorani taluka ,Deputy Collector ,Bhushan Kumar ,Jamabandhi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா