- புதுக்கோட்டை
- சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்
- மவுண்ட் சீயோன் பள்ளி
- மவுண்ட் சியோன் சிபிஎஸ்இ பள்ளி
- புதுக்கோட்டை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்
- தின மலர்
புதுக்கோட்டை,மே16:12ம் வகுப்பு பொதுத்தேர்வில் லேணாவிலக்கு மவுண்ட் சீயோன் சிபிஎஸ்இபள்ளியில் 12ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 6 இடங்களை 7 மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 9 இடங்களை 13 மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 12ம் வகுப்பில் என். ராம் 488/500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலும் டி.சந்தோஷ் 485/500மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்திலும், ஜெ.ஏ.ஜோஸ்னா 484/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்திலும், ஆர்.ரெமி பயஸ் 483/500 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்திலும், ஆர்.ஹர்ஷத் 481/500 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்திலும், எம்.தெய்வானை மற்றும் எஸ்.ஏ.விஸ்வநாத் இருவரும் 480/500 மதிப்பெண்கள் பெற்று ஆறாம் இடத்திலும் சாதனை புரிந்து பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
10ம் வகுப்பில் சி.மிதுன் கைலாஷ் 495/500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலும், ஆர்.எஸ்.சஹானா 491/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்திலும், ஏ.ஹரிணி மற்றும் ஆர்.தாருண்யா இருவரும் 489/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்திலும், இ.நிரஞ்சன் மற்றும் எஸ்.சாதிகா 488/500 மதிப்பெண்கள், ஹரிகுமரன் 486/500 மதிப்பெண்கள், சி.ஜோயல் எஸ்லி மற்றும் எஸ்.லிங்க நாகேஷ்வரன் 485/500 மதிப்பெண்கள், அகிலேஷ் பாலன் 483/500 மதிப்பெண்கள், வி.அனன்யா மற்றும் எஸ்.ஆர்.பிரித்வி 482/500 மதிப்பெண்கள்,எஸ்.கமலி 481/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்து பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பள்ளியின் தலைவர் டாக்டர்.ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர். ஜலஜாகுமாரி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்துக்களையும் இனிப்புக்களையும் வழங்கி பெருமை படுத்தினர்.
The post புதுக்கோட்டை சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மவுண்ட் சீயோன் பள்ளி மாவட்ட அளவில் சாதனை appeared first on Dinakaran.
