- ராஜபாளையம் தொகுதி
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
- ராஜபாளையம்
- சட்டமன்ற உறுப்பினர்
- கலங்கப்பேரி பஞ்சாயத்து
- வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்
- தின மலர்
ராஜபாளையம், மே 16: ராஜபாளையத்தில் புதிய பேவர் பிளாக் சாலை பணிகளை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். ராஜபாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலங்காபேரி ஊராட்சி யாதவர் தெரு தொட்டியபட்டி கிராமத்தில் மெயின் தெரு மற்றும் கொத்தங்குளம் ஊராட்சி கிழக்கு தெருக்களில் பேவர் பிளாக் தளம் பதிக்கும் பணிக்காக நேற்று பூமிபூஜை நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், முன்னாள் சேர்மன் மல்லி ஆறுமுகம், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா முன்னிலையில் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் கணேசன், கழக கிளைச்செயலாளர்கள் அய்யகோன், ஜெனரத்தினன், கிருஷ்ணன், ரவிக்குமார், மீனா, ராமர், கோவிந்தன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ராஜபாளையம் தொகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை பணி: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.
