×

மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

திருப்புத்தூர், மே 16: திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டியில் உலக அருங்காட்சியகத் தினத்தையொட்டி மே 18ல் நடைபெறும் ஓவியப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்திய அருங்காட்சியகங்கள், செட்டிநாடு பாரம்பரிய கட்டங்கள், தமிழக சுற்றுலாத்தளம் இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் ஓவியம் வரையலாம், போட்டிகள் 6 முதல் 12 வயது வரை மற்றும் 12 வயது முதல் 18 வயது வரை, இருபிரிவுகளாக நடைபெறும்.

நகர வயிரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் மே 18ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வானவர்களுக்கு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலரால் சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் முன்பதிவிற்கு 8524094345 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவர்களுக்கான ஓவியப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Nagara Vairavanpatti ,World Museum Day ,Tamil Nadu ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்