×

வாடிப்பட்டி அருகே சாதனை விளக்க பொதுக்கூட்டம்: வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு

வாடிப்பட்டி, மே 16: மதுரை வடக்கு மாவட்ட திமுக வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கச்சைகட்டி மந்தை திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் அயோத்தி ராமன், மாவட்ட பிரதிநிதி எல்லையூர் அய்யாவு வரவேற்றனர்.

பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர் ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, வக்கில் கார்த்திக், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், மனோகர வேல் பாண்டியன், விவசாய அணி வக்கில் முருகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அயூப்கான், பூச்சம்பட்டி சீனிவாசன், ஜெகன், பெரியக்கா, முருகன், பங்களா மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் சிவமுத்துவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பதினெட்டு, சக்திவேல், கந்தவேல், லட்சுமணன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலமுருகன் நன்றி கூறினார்.

The post வாடிப்பட்டி அருகே சாதனை விளக்க பொதுக்கூட்டம்: வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Assembly ,Wadi Patti ,Venkatesan MLA ,Wadipatty ,Dimuka Wadipatti Northern Union ,Dimuka Government ,Kachigati Manda Thidal ,Union ,Pala Rajendran ,Venkatesan ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா