- புனித தேவசகாயம் கோயில்
- துக்கைலைப்பட்டி, சாணார்பட்டி
- Gopalpatti
- துக்கைலைப்பட்டி
- Chanarpatti
- துக்கைலைப்பட்டி,
கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே புகையிலைபட்டியில் அமைந்துள்ள புனித தேவசகாயம் சிற்றாலயத்தில் 37வது ஆண்டு திருவிழா கடந்த மே 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மே 14ம் தேதி மாலை ஆலய அர்ச்சிப்பு விழா, புனிதரின் சுரூப நிலை நாட்டலும், இரவு பங்குத்தந்தை நெல்சன் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக தேவசகாயம் சுரூபமானது புனித இன்னாசியார் தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதரின் மின் ரத பவனி, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டுபுனிதரின் அருளாசி பெற்று சென்றனர்.
The post சாணார்பட்டி புகையிலைபட்டி புனித தேவசகாயம் ஆலயத்தில் கூட்டு திருப்பலி appeared first on Dinakaran.
