- கடலூர்
- தொழிற்சாலை விபத்து
- அன்புமணி
- சென்னை
- பா.ம.க.
- லோயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ்
- சிப்காட்
- குடிகாடு
- தொழிற்சாலை
- தின மலர்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் என்ற தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி அதிகாலை வெடித்ததில் குடிகாடு கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ரசாயனக் கழிவுகள் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் டேங்கர்கள் வெடிப்பதும், அதன் கழிவு நீர் ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டதாகமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ஆணையிடுவதுடன், குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மூட ஆணையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post கடலூர் ஆலை விபத்து; பாதித்த மக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
